சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோயில்களில் செய்யப்பட்டு வந்த அன்னதானத்தை, ரத்து செய்து அதை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிளுக்கு வழங்க ஆவன செய்தார். மேலும் கோவில் சொத்துக்கள் குறித்த ஆன்லைன் பதிவேற்றம் செய்து வருகிறார். அத்துடன், கோவில்களில் உள்ள வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் பிரபலமான கோவிலுக்கு சொந்த இடங்களில் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். மேலும், சிதம்பரம் கோவிலுக்கு சொந்த இடங்களை மீட்க சட்டப்போராட்டம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.