டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர்கள் விவகாரத்தில், கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது; இதையடுத்து புதிய துணைவேந்தர்களாக சஜி கோபிநாத், சிசா தாமஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஏற்கனவே ஆளுநர்கள் விஷயத்தில் தமிழ்நாடு, மேற்கவங்கம், பஞ்சாப் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ள நிலையில், கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை பல முறை விசாரித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிக்க, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்தக்குழு, இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஒரு பெயரை இறுதி செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், . கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பரிந்துரைத்த பெயர் ஒன்றும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பரிந்துரைத்த பெயர் ஒன்றும் என இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமினம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் பரிந்துரைத்த சஜி கோபிநாத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் தேர்வு செய்த சீசா தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கேரளா அரசு தரப்பும் ஒப்புதல் வழங்கியுள்ளது.