சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இன்று பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியில் இணைந்தார். அவருக்கு புதிய கட்சியில் நிபந்ததனையுடன் கூடிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே. சுரேஷ்மீது, ஆரூத்ரா கோல்டு முறைகேடு புகார் உள்ளது. இதன் காரணமாக அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முன்னதாக அவர் சினிமா தயாரிப்பு காரணமாக துபாயில் இருந்ததால், அவரை காவல்துறையினர் தேடிய நிலையில், துபாயில் இருந்து வந்தபின் வழக்கின் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து., தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் ஆர்கே.சுரேஷ் இன்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகராக அவதாரெமெடுத்தவர் ஆர்.கே.சுரேஷ். பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளதுடன், பல படங்களில் வில்லனராக நடித்து வந்தார்.
இவர் தொடக்கத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில், கமல்ஹாசனின் நடவடிக்கை பிடிக்காததால், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் பொறுப்பும் வழங்கப்பட்டது. இதற்கிடையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரின் பெயரும் அடிபட்டது. இந்த நிதி நிறுவனத்தில் ஆர்.கே.சுரேண் பல கோடி கடனாக பெற்றுவிட்டு, அதை திரும்ப தாராததால்தான் அந்நிறுவனம் முடங்கியதாக கூறப்பட்டது. இந்த வழக்கில், ஆரூத்ரா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் பல ஆயிரம் கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதையடுத்து, ஆர்கே, சுரேஷின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
இதையடுத்து சில நாட்கள் துபாயில் இருந்தவர், பின்னர், சென்னை வந்தபின் வழக்கின் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். பாஜகவில் இருந்து அவர் விலகலாம் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்துள்ளார். பிரபல கல்வி நிறுவன அதிபரும், முன்னாள் எம்பியுமான பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலையில் ஆர்.கே.சுரேஷ் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த அன்றே ஆர்.கே.சுரேஷுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்பு தொடர்பாக ரவி பச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில், “பாரிவேந்தரின் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பில் ஆர்.கே.சுரேஷ் நியமிக்கப்படுகிறார்.