பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் புற்றுநோயால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கூல் ஜெயந்த்.

ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குரூப் டான்ஸராக அறிமுகமான இவர் பின்னர் பிரபுதேவா,ராஜசுந்தரம் மாஸ்டர்களின் நடனக் குழுவில் உதவி நடன இயக்குனராக 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றினார்.

தமிழுக்கு இணையாக மலையாளத்திலும் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ள கூல் ஜெயந்த், Four the student படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடன இயக்குனருக்கான விருதையும் கைப்பற்றினார்.

25 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்மைக்காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.