விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ்’ .
இந்த நிகழ்ச்சி சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. மீரா இயக்குனர் சேரன் மீது வைத்த குற்றசாட்டை பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண்கள் உரசுவதற்கும் ஒப்பிட்டு பேசியுள்ளார் தொகுப்பாளர் கமல் .
அப்போது போட்டியாளர் சரவணன் , “நான் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் சிரித்துவிட்டு வேறு விஷயத்திற்கு சென்று விட்டார் கமல் .
இந்நிலையில் இதற்கு பாடகி சின்மயி “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பேருந்தில் பயணம் செய்தேன் என்பதை ஒளிபரப்பு செய்கின்றனர். இது பார்வையாளர்களுக்கும், பெண்களுக்கும் நகைச்சுவையாக தெரிகிறது. அவர் பேசியது கேவலமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.