பீஜிங்

சீன அரசு தனது ராணுவ ப்ட்ஜெட்டை 7.2% உயர்த்தி உள்ளது.

சீன நாட்டின் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்.பி.சி.) என அழைக்கப்படுகிறது. ஆனால் அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பெயரளவுக்கான ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றமாகவே உள்ளது.

இன்று சீனாவில் தொடங்கிய தேசிய மக்கள் காங்கிரஸ் ஆண்டு கூட்டத் துவக்க அமர்வில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  அரசு ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த2024-ம் ஆண்டில் பாதுகாப்புக்காக 1.665 டிரில்லியன் யுவான் (231.4 பில்லியன் டாலர்) செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகளாவிய நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளுடனான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில் சீனா தனது ராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவத்தை விடச் சீன ராணுவமான மக்கள் விடுதலை ராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், பட்ஜெட் ஒதுக்கீட்டில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. சீனா உலகின் இரண்டாவது பெரிய ராணுவ பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.