பீஜிங்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதால் புதிய அமைச்சரைச் சீன அரசு நியமித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் சீனாவில் வெளியுறவுத்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்த 57 வயதான குயின் கேங். கடந்த மாதம் ஜூன் 25ம் தேதி ரஷியா, வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைச் சந்தித்தார்.
சீன செய்தி நிறுவனங்களில் செய்திகள் இது குறித்து வெளியாகின. இதற்குப் பின் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூலை 4-ம் தேதி ஜூலை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக்கொள்கை தலைவருக்கும் இடையேயான சந்திப்பைச் சீனா ரத்து செய்தது.
அமெரிக்க மத்திய வங்கி தலைவர், அமெரிக்கப் பருவநிலை மாற்றத்துறை அதிகாரி ஜான் கெரி ஆகியோர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச்சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு தொடர்பான மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்றது. இதிலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் பங்கேற்கவில்லை.அவர் உடல்நலம் சரியில்லாத காரணங்களால் மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை என சீனா தெரிவித்தது.
ஒரு மாதமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
தற்போது குயின் கேங் ஐ வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சீனா நீக்கி நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யு செயல்படுவார் என சீனா தெரிவித்துள்ளது. ஆனால் சீன அரசு குயின் கேங் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.