சென்னை: கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று திறந்​து​வைக்​கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாகர்​கோ​வில் சுடலை​முத்து கிருஷ்ணன் ஆகிய ‘என்​.எஸ்​.கே’ 1908-ம் ஆண்டு பிறந்​தார். 1940, 1950-களி​ல் தமிழ்த் திரை​யுல​கின் மிகச் சிறந்த நகைச்​சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்​பாளர், சினிமா தயாரிப்​பாளர் என்​றெல்​லாம் புகழுடன் விளங்​கிய​வர்.

ஜி.என்​.செட்டி சாலை – திரு​மலைப் பிள்ளை சாலை சந்​திப்​பில் அண்​ணா​வால் திறக்​கப்​பட்ட கலை​வாணர் சிலை 1999-ம் ஆண்​டில் மேம்​பாலம் கட்​டப்​பட்​ட​போது சாலை ஓரத்​தில் இடம் மாற்றி அமைக்​கப்​பட்​டது.

இவ்​விடத்​தில் உள்ள சிலையை கலை​வாணர் அரங்க வளாகத்​தினுள் மாற்​றியமைக்​கு​மாறு அவரது குடும்​பத்​தினர் அரசிடம் கோரிக்கை வைத்​தனர். இந்த கோரிக்​கையை ஏற்​று, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்​படி, கலை​வாணர் அரங்க வளாகத்​தில் ரூ.50 லட்​சம் மதிப்​பீட்​டில் நிறு​வப்​பட்​டுள்ள புதுப்​பிக்​கப்​பட்ட கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் திரு​வுரு​வச் சிலையை இன்று (பிப்​.5) காலை 10 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்​ திறந்து வைக்கிறார்.

[youtube-feed feed=1]