சென்னை: மெட்ரோ திட்டம் விரிவாக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல் அரசு துறைகள் ஜெட் வேகத்தில் இயங்கி வருகின்றன. முதல்வர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர். இதனால், மாநில வளர்ச்சி பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். மேலும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.