சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் குடும்பத்தினர் அவரை  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வழக்கமான பரிசோதனைக்காக அவர் கோபாலபுரம் வீட்டில் இருந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. .வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். மாலை 6 மணி அல்லது இரவு 7 மணிக்குள் வீடு திரும்பி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தயாளு அம்மாவுடன் மு.க அழகிரி, செல்வி, தமிழரசு மருத்துவமனையில் உள்ளனர்.