சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில்  தகவல் தொழில்நுட்ப  இரண்டு நாள் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  அப்போது, சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று கூறினார்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில்  Umagine TN  என்ற தலைப்பில் 2 நாட்கள்  உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இன்று காலை    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது,   தற்போது உலகம் முழுவதும்,  AI தான் இன்று பல இடங்களில் பேசுபொருளாக உள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகதான் செய்யும். AI தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்த நேரத்தில் இந்த மாநாடு அவசியமே என்றார்.

வணிகத்தையும், தொழில்நுட்பத்தையும் எப்போதும் ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.  புத்தாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் அரசு செயல்படுகிறது. அத்துடன் தமிழ்நாடு  இன்னும் கூடுதலான வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.  எத்தனை வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும் மேலும் வளர்ச்சி தேவை என்பது தான் எனது எண்ணம். உண்மையான வளர்ச்சி என்பது சமச்சீரானதாக இருக்க வேண்டும் என்று கூறியதுடன்,   ஐ.டி துறை வளர மனித வளம் என்பது மிகவும் முக்கியமானது என்றார்.

மாநிலத்தின் அனைத்து திட்டங்களும் இணையதத்தில் வழங்கப்பட வேண்டும என்று கூறிய முதல்வர், அதன் காரணமாக அதிக அளவில் மக்கள் பயன் அடைவ்ர்,  அதனால்  இணைய சேவை எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  செயல்பட்டு வருவதாக கூறியதுடன், தமிழ்நாடு அரசு சைபர் பாதுகாப்பிற்கும்  முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.

சைபர் செக்யூரிட்டி, இணையத்தில் தமிழ் வழிக்கல்வி, தமிழ் வழி தேடுதலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்ளளது என்றவர், பல்வேறு திட்டங்கள் மூலம் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.   இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும் என்று கூறியதுடன் டிஜிட்டல் குற்றங்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க வேண்டும் என்றார்.