சென்னை: தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9ந்தேதி) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 15, 2025 அன்று, சென்னை கலைவாணர் அரங்கில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் சிறப்பான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது முன்னோடித் திட்டமாக, சென்னையில் 31,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு மற்றும் பிற வசதிகளை வழங்குகிறது.
இதன் விரிவாக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
.இந்த திட்டத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 480 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.50 லட்சம் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 30,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]