கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்க ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் 85 ஆயிரம் இலவச வீட்டு மனை பட்டாக்களை முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கியதுடன், ஓசூர் மாநகரில் LC104 ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என்பது உள்பட5 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் ’புதிய திட்டப்பணிகள் தொடக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா’ நேற்று (செப்டம்பர் 14) அன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து ரூ.562.14 கோடி மதிப்பிலான 1,114 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து,ரூ.2884.93 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்ட 193 திட்டப்பணிகள் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. இதனுடன் 2,23,013 பயனாளிகளுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் 85 ஆயிரம் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசியவர்ல, கல்வி, சாலை, குடிநீர், சுகாதாரம், வேளாண்மை மற்றும் நகர்ப்புற வசதிகள் போன்ற துறைகளில் தொடங்கப்பட உள்ள புதிய திட்டங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பெரிய உந்துதலைத் தரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணகிரிக்கான 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அஞ்செட்டியை தலைமையகமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்
. நிறைமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலை கிராமங்களுக்கு ரூ.12.33 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்.
கெலமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கெலமங்கலம் புறவழி சாலை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும்.
ஓசூர் மாநகராட்சியில் உள்ள NH 44 மற்றும் NH 844 ஐ இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
ஓசூர் மாநகரில் LC104 ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நலதிட்ட உதவிகள் குறித்து குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் இறுதியாக 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக மாற வேண்டும் என கூறியிருந்தார். மேலும் அதில், “அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா – பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா – தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா மலிவான அரசியலை கையில் எடுத்துள்ள கூட்டத்தை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்” என குறிப்பிட்டிருந்தார்.
[youtube-feed feed=1]