டெல்லி:

லைநகர் டெல்லியில் உள்ள அரசு பேருந்துகளில் இன்றுமுதல் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், எதிர்காலத்தில், மாணவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இலவச பயணம் திட்டம்அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வரும், ஆம்ஆத்மி கட்சித்தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் அரசு போக்குவரத்துக்கு உட்பட்ட பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்த திட்டங்களை படிப்படியாக அமலுக்கு கொண்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்தவர், இன்று முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று முதல்  அரசு பேருந்துகளில் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கென மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முயற்சி என தெரிவித்து உள்ளார்.