கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு சென்ற குகேஷுக்கு அவரது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இளம் வயதிலேயே பெற்ற வீரர் என்ற சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த செஸ் சூப்பர் மாஸ்டர் குகேஷ் பெற்றுள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குகேஷ், “இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய சாதனை. 7வது சுற்றில் தோல்வி அடைந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. முதலில் இருந்தே இந்த தொடரில் வெல்வேன் என நம்பிக்கையுடன் விளையாடினேன்” எனத் தெரிவித்தார்.