சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை வழங்கும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இன்று இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலா மற்றும் படைப்பாக்க பொருளாதாரத் துறைக்கான பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் (Wong Hon Wai) தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே சென்னை – கோலாலம்பூர் மற்றும் சென்னை – லங்காவி என இரு நேரடி பயணச் சேவைகளை வழங்கி வரும் இண்டிகோ விமான நிறுவனம் மலேசியாவில் மூன்றாவது இடமாக பினாங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்நிலையில், அவ்விரு நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், இப்புதிய நேரடி விமானச் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இம்முயற்சி பினாங்கின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுலா வணிகம் அல்லது மருத்துவத் தேவைகளுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டு வருமெனவும் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இது கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமெனவும் எதிர்பார்க்கபப்டுகிறது.

டிசம்பர் 21 முதல் சென்னை டு பினாங்கு தினசரி நேரடி விமான சேவை