சென்னை: மழை வெள்ளத்தில்  சிக்கி தத்தளிக்கும் தலைநகரர் சென்னையின் நிலைமை குறித்து, மாநில அரசுக்கும், சென்னை மாநகராட்சிக் கும்  சென்னை உயர்நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளதுடன்  2015 வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்துவரும் மழை காரணமாக சென்னை மட்டுமின்றி பல மாவட்டங்கள் தண்ணீரால் சூப்பட்டு உள்ளது. சென்னையில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால்  பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல இடங்களில் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திகைத்து போயுள்ளனர். தண்ணீர் செல்லும் பகுதிகள், தண்ணீர் சேமிக்கும் பகுதிகள் அனைத்தும் கட்டிடங்களாக மாறி உள்ளதால், சென்னையில் தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மற்றம் இன்று விசாரணைக்கு வந்த சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் கடுமையாக விமர்சித்தது.  2015ஆம் ஆண்டு வெள்ளத் திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 2015 பெருவெள்ளத்தில் சந்தித்ததைபோலத்தான் சென்னை மீண்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறது, பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். இதுவரை அதிகாரிகள் ஏதும் கற்றுக்கொள்ளவில்லையா என்றும், கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்துகொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பியது.

215ம் பெருவெள்ளத்தை பாடமாக வைத்தே பருவமழையை சமாளிக்க முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும்,  இந்த நிலைமை, ஒரு வாரத்திற்குள்  சீராகவில்லை எனில் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.