சென்னை:

பாஜ.வை சேர்ந்த 3 பேரை, கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று 3 நியமன எம்எல்ஏக்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் பல கட்ட விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

தன் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி,  புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் 3 பேருக்கு, நியமன எம்எல்ஏக்கள் பதவி வழங்கி, அவர்களுக்கு இரவோடு இரவாக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.கடந்த ஜூலை 4-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆனால், அவர்கள் பதவி ஏற்றது செல்லாது என சட்டமன்ற சபாநாயகர், அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க மறுத்தும்,  அவர்கள் சட்டசபைக்குள் நுழைய  அனுமதிக்க முடியாது என்றும் கூறிவிட்டார்,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபாநாயகரின் ஆணையை ரத்து செய்யக்கோரியும் பாஜக  நியமன எம்எல்ஏக்கள்  சாமிநாதன்,  சங்கர், செல்வகணபதி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிவடைந்த நிலையில இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி சுந்தர் அமர்வு பிற்பகல் 2.15மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

பரபரப்பான இந்த வழக்கில், பாஜகவினரை தன்னிச்சையாக கிரண்பேடி நியமனம் செய்தது சரியா என்பது குறித்து தெரிய வரும்.

கிரண்பேடி நியமனம் சரியானது என தீர்ப்பளித்தால் பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும் அதிகாரப்பூர்வமாக எம்எல்ஏக்களாக செயல்படுவார்கள்..