சென்னை:
ழைகாலத்தில் கொரானா தடுப்போடு, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு பணிகளும் சவாலாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக் காலத்தில் இரண்டு சவால்களை சென்னை மக்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒன்று, ஊழியர்கள் விரைவில் பணிக்கு வர முடியாத காரணத்தால் மக்களுக்கான பணிகள் தடைப்படும் எனவும், இரண்டாவது கொரோனா தடுப்பு பணியிலும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிப்பதையும் தடுக்க வேண்டும் எனவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் தொற்று முழுவதுமாக ஒழிக்க முடியும். அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு 100% சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது. வயதான தொற்று பாதித்தவர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர அந்த மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டால் போதும். கடந்த 3 ஆண்டுகளை விட இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்துள்ளது. குறிப்பாக (2018 ஏப்-4859, மே-5149), (2019 ஏப்-4888, மே-5738) (2020 ஏப்-3754, மே-4532) என்ற புள்ளி விவரங்களை அளித்தார்.