டில்லி:

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு டில்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் 2 ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கு டில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாதுரி குப்தா குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா இன்று தீர்ப்பு கூறினார். தண்டனை தொடர்பான வாதங்கள் நாளை நடைபெற்ற பின்னர் தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

[youtube-feed feed=1]