மதுரை: இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்களின் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில ரயில்களின் நேரத்தை மாற்றியுள்ளதாகவும் எனவும், இந்த புதிய நடைமுறை இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (வண்டி எண் – 16344) மதுரையில் இருந்து மாலை 16:10 மணிக்கு பதிலாக மாலை 15:45 மணிக்கு தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை – சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் (வண்டி எண் – 22624) மதுரையில் இருந்து இரவு 08:50 மணிக்கு பதிலாக இரவு 08:45 மணிக்கும், மதுரை – புனலூர் விரைவு ரயில் (வண்டி எண் – 16729) மதுரையில் இருந்து இரவு 11:25 மணிக்கு பதிலாக இரவு 11:20 மணிக்கும் புறப்படும்.
திருநெல்வேலி – செங்கோட்டை ரயில் (வண்டி எண் – 56741) திருநெல்வேலியிருந்து காலை 07:00 மணிக்கு பதிலாக காலை 06:50 மணிக்கும், திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் (வண்டி எண் – 56708) திருநெல்வேலியில் இருந்து காலை 07:10 மணிக்கு பதிலாக காலை 07:05 மணிக்கும், திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் (வண்டி எண் – 56727) திருநெல்வேலியில் இருந்து காலை 07:25 மணிக்கு பதிலாக காலை 07.15 மணிக்கும், திருநெல்வேலி – செங்கோட்டை ரயில் (வண்டி எண் – 56743) திருநெல்வேலியில் இருந்து மதியம் 01:50 மணிக்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கும் புறப்படும்.
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் (வண்டி எண் – 16848) செங்கோட்டையிலிருந்து காலை 07:05 மணிக்கு பதிலாக காலை 06:55 மணிக்கும், செங்கோட்டை – திருநெல்வேலி ரயில் (வண்டி எண் – 56738) செங்கோட்டையில் இருந்து மதியம் 02:35 மணிக்கு பதிலாக மதியம் 02:05 மணிக்கும் புறப்படும். அதேபோல, தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் (வண்டி எண் – 56721) தூத்துக்குடியில் இருந்து மாலை 06:25 மணிக்கு பதிலாக மாலை 06:15 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் (வண்டி எண் – 56728) திருச்செந்தூரிலிருந்து காலை 07:20 மணிக்கு பதிலாக காலை 07:10 மணிக்கு புறப்படும்.
மேலும், மணியாச்சி – தூத்துக்குடி ரயில் (வண்டி எண் – 56726) மணியாச்சியிலிருந்து மாலை 03:10 மணிக்கு பதிலாக மாலை 03:00 மணிக்கும், மணியாச்சி – திருச்செந்தூர் ரயில் (வண்டி எண் – 56731) மணியாச்சியிலிருந்து காலை 11:05 மணிக்கு பதிலாக காலை 11:00 மணிக்கும், மணியாச்சி – தூத்துக்குடி ரயில் (வண்டி எண் – 56724) மணியாச்சியிலிருந்து இரவு 08:25 மணிக்கு பதிலாக இரவு 08:15 மணிக்கும், காரைக்குடி – திருச்சி ரயில் (வண்டி எண் – 56816) காரைக்குடியில் இருந்து மாலை 03:30 மணிக்கு பதிலாக மாலை 03:15 மணிக்கும் புறப்படும்.
தற்போது, வழக்கமான நேரத்திற்கு முன்னதாக புறப்படும் ரயில்களின் விபரம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில ரயில்கள் வழக்கமான நேரத்திற்கு பிறகு புறப்படும் படியாகவும் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பயண நேரம் குறைப்பு:
தாதர் – திருநெல்வேலி ரயில் (11021)
சென்னை – திருநெல்வேலி நெல்லை ரயில் (12631)
நாகர்கோவில் – சென்னை ரயில் (12668)
சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் ரயில் (12689)
சென்னை – குருவாயூர் ரயில் (16127)
கோயம்புத்தூர் – ராமேஸ்வரம் ரயில் (16618)
ஈரோடு – செங்கோட்டை ரயில் (16845)
மாயவரம் – செங்கோட்டை ரயில் (16847)
பெரோஸ்பூர் – ராமேஸ்வரம் ரயில் (20498)
திருச்செந்தூர் – சென்னை செந்தூர் ரயில் (20606)
ராமேஸ்வரம் – புவனேஸ்வர் ரயில் (20895)
நாகர்கோவில் தாம்பரம் ரயில் (22658) ஆகியவற்றின் பயண நேரம் முறையே 40, 30, 40, 35, 35, 30, 40, 35, 30, 30, 30, 40 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், 57 விரைவு ரயில்களின் பயண நேரம் 05 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பயண நேரத்தின் அடிப்படையில் ரயில் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்” என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
….