சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. ஆயினும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது.
தற்போது தமிழகட்தில் 8 மாவட்டங்களுக்குஇடி மின்னலுடன் கூடிய மிதமான மழை அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.