சென்னை: காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். ஜூலை 19 மற்றும் 20-ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஆகிய மாவடடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.