டெல்லி

த்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம்,

”தினமும் தமிழகத்துக்கு 5, 6 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை விட தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது.

எப்போதுமே தமிழகத்துக்கு கர்நாடகா தொல்லை கொடுத்தது இல்லை. எனவே உபரி நீரை பயன்படுத்தும் விஷயத்தில் கர்நாடகத்தின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு சில்லரை அரசியல் செய்கிறது. மத்திய அமைச்சர்களை காங்கிரசார், குறைத்து பேசுகிறார்கள்.நான் என்னும் அகங்காரமின்றி நாம் என்னும் பண்பாட்டை கடைபிடிக்க துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு தெரியவில்லை.

என்று கூறி உள்ளார்.