சென்னை: சென்னையின் மைய பகுதியான, மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘எல்’ வடிவ பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 16ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்க முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த 60 கோடி ரூபாய் மேம்பாலத் திட்டத்திற்கு பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டது. ஆனால், இப்போது மாநில நெடுஞ்சாலைத் துறை இரண்டு முக்கிய தடைகளை நீக்கியுள்ளது. முதலாவது, சர்தார் படேல் சாலை-OMR சந்திப்பில் மையப் பாலத்தை அமைப்பது. இரண்டாவது, சர்தார் படேல் சாலையில் அணுகு சாலையை உருவாக்குவது. இந்த இரண்டு வேலைகளும் முடிந்ததால், மேம்பாலம் திறப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

மத்திய கைலாஷ் சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் செல்கின்றன. இதில், கிண்டியில் இருந்து OMR நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டுதான் நெடுஞ்சாலைத் துறை இந்த L-வடிவ மேம்பாலத்தைக் கட்டியுள்ளது. இந்த மேம்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த எல் வடிவ பாலம் குறித்து பலத்தரப்பட்ட தகவல்கள் உலா வருகின்றன. . சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு (OMR) போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த 652 மீட்டர் பாலம் உதவும் என்றாலும், இதன் குறுகிய வளைவு, 30 கி.மீ வேகக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்த அச்சங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து, ‘எல்’ வடிவமேம்பாலப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்த ‘எல்’வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை பிப்.16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்” என்று தெரிவித்தார்.
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பாலமானது, அடையாறு சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இச்சாலை சந்திப்பில் எப்போதும் வாகன நெரிசல் காணப்படும் நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் காரணமாக வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குச் செல்லும் மேம்பாலம் வழியாக எளிதில் செல்ல முடியும். இதனால், அடையாறு பகுதியிலிருந்து, கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்கு தடையின்றிச் செல்ல முடியும்.
இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. , இந்த வளைவுப் பகுதியில் பயமின்றி பயணிக்கலாம். இருப்பினும், வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]