சென்னை: தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை மத்திய அரசு  நிராகரித்ததுள்ளது. அதற்காக காரணமாக,   தேசிய பாதுகாப்பு மற்றும் எச்ஏஎல் (HAL) விமான நிலையத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்மொழிந்த ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட வுள்ளது என கூறியிருந்தார்.  கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி  நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ்  ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று  அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு மற்றும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, அனுமதிக்க மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விமான நிலைய திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழ்நாடு மக்களின்  மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஓசூர் விமான நிலையத் திட்டம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நலன்களைக் கருத்தில் கொண்டு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் எஸ். கல்யாணசுந்தரம் மற்றும் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். அப்போது, பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்  (HAL) விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்திய பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நாட்டின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே, தமிழக அரசின் ஒரு ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான  இந்த முன்மொழிவு தற்போது பரிந்துரைக்கப்படவில்லை என்று ர் தெளிவுபடுத்தினார்.

 தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓசூர் விமான நிலையத்திற்கான இட அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பம் இந்திய விமான நிலைய ஆணையம், விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முன்னதாக ஜூன் மாதத்திலேயே, வான்வெளி கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி பாதுகாப்பு அமைச்சகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், அந்த கோரிக்கை கடந்த ஜனவரி மாதம் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழில் வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் மிகவும் அவசியம் என்பதால், தமிழக அரசு தனது முயற்சியைக் கைவிடவில்லை. இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் தேவையான நியாயமான காரணங்களைத் தயார் செய்து, மீண்டும் ஒருமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

[youtube-feed feed=1]