டில்லி

மூக வலைத்தளங்களில் உள்ள குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

நேற்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

”சமூக வலைத்தளங்களாகிய எக்ஸ், யூடியூப், டெலிகிராம போன்றவற்றின் இந்திய இணையத்தில் அவற்றின் தளங்களில் இருந்து குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள், வீடியோக்களை நீக்கும்படி மத்திய அரசால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அத்தகையவற்றை முறையாகவும், நிரந்தரமாகவும் நீக்க வேண்டும். யாரும் அந்த தளங்களில் யாரும் அந்த படங்களைப் பார்ப்பதற்கான வழியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் எதிர்காலத்திலும் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும்வகையில் அதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தாமாக முன்வந்து செய்ய வேண்டும்”

என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைசர் ராஜீவ் சந்திரசேகர்,

‘நாங்கள் சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள் இல்லாத நிலையை உறுதிப்படுவதற்காக எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மத்திய அரசு  தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி பாதுகாப்பான, நம்பிக்கைக்குரிய இணையத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. 

நோட்டீசில் குறிப்பிட்ட  சமூக வலைத்தளங்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவிட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவு திரும்பப் பெறப்படும். இந்தியச் சட்டத்தின்படி அந்த சமூக வலைத்தளங்கள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்’ 

என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.