டெல்லி: CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய கல்வி வாரியமான, சிபிஎஸ்இ  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில், ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் நாடு முழுவதும் ஏப்ரல் 26ந்தேதி தொடங்கி ஜூன் 15ந்தேதி முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 22ந்தேதி) வெளியிடப்பட்டு உள்ளது.

நடபாண்டு தேர்வு எழுதிய 14,35, 366 பேரில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி 92.71 சதவிகிதம்.

அதிக பட்ச தேர்ச்சி பெற்ற மாவட்டம், கேரளாவைச் சேர்ந்த திருவணந்தபுரம். 98.83 சதவிகிதம் பெற்று நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பெங்களூரு 98.16 சதவிகித தேர்ச்சி பெற்று 2வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை  92.71 சதவிகித தேர்ச்சியுடன் 3வது இடத்தில் உள்ளது.

முழு விவரம் காண கீழே உள்ள பட்டியலை பாருங்கள்: