சென்னை:
சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா  ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்இ தேர்வு வெளியிடப்படுவதில் தாமதமானது. இதற் கிடையில்,  வடகிழக்கு மாநிலங்களில்  ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான நிலுவைத் தேர்வுகளை ரத்து செய்வதாக சி.பி.எஸ்.இ அறிவித்தது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடு மதிப்பீடு, சிபிஎஸ்இ குழு பரிந்துரை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு மொத்தம் 88.78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு பெண்கள் தேர்ச்சி சதவீதம் 92.15 சதவீதமாகவும்,  மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.19 சதவீதமாகவும் உள்ளது. பெண்கள் ஆண்களை  விட 5.96 சதவீதம் சிறப்பாக செய்துள்ளனர். திருநங்கைகள் மாணவர்களில் தேர்ச்சி சதவீதம் 66.67 சதவீதம்.
இன்றைய தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதாகவும், 5.38% தேர்ச்சி அதிகரித்து உள்ளதாகவும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.