டெல்லி: வருவமான வரி கணக்கு செலுத்த மேலும் 15நாட்கள் அவகாசம் வழங்கி மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வரி பாக்கியை ஜனவரி 15ந்தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை அபராதம் இன்றி செலுத்த டிசம்பர் 31ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 15ந்தேதி வரை அபராதத்துடன் செலுத்தலாம்.
2024-2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதி கடைசிநாள் ஆகும். அந்த வாய்ப்பை தவற விட்டவர்கள், அபராதத்துடன், தாமதமாக கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் டிசம்பர் 31-ந் தேதி ஆக இருந்தது. அவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். இருப்பினும், மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக இருப்பவர்கள், ரூ.1,000 அபராதம் செலுத்தினால் போதும்.
இதற்கிடையே, அபராதத்துடன் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் நேற்று முடிவடைய இருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்படி, ஜனவரி 15-ந்தேதி வரை அபராதத்துடன் தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.