டெல்லி
வரும் ஜ்னவரி 17 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருந்தபோது மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் ஊழல் வழக்கில் கடந்த ஜுன் 26ம் தேதி சிறையில் வைத்தே சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் கடந்த ஜுலை 12 ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, கடந்த ஜுலை 13ம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையானார்.
மதுபான கொள்கை முறைகேட்டில் பதியப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி இந்த மனு டெல்லி ஐஉயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.