டெல்லி: இந்தியா, மொரீசியஸ் நாடுகள் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தவிர, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு முறையை வலுப்படுத்த குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கொண்டு வந்துள்ள முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது.