டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகரை நோக்கி பேப்பர் வீசி அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் ஓம்பிர்லாவை நோக்கி பேப்பரை எறிந்த தமிழக எம்பிக்கள் இருவர் உள்பட 8 பேர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசும் போது, முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதி இன்னும் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன ஊடுறுவல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார்.
ராகுல் காந்தி சீனா தொடர்பாக பேசத் தொடங்கியதும், ஆளும் பாஜக உறுப்பினர்கள் அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தியை பேசவிடவில்லை எனக் கூறி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை மீது ஏறி நின்று ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சில எம்பிக்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று காகிதங்களை வீசி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று கொண்டு வந்தார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன், அம்ரிந்தர் ராஜா வாரிங், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட எட்டு பேர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங், ராஜா வாரிங், குர்ஜீத் சிங் அவுஜ்லா, பிரசாந்த் யதோராவ் படோல் மற்றும் கிரண் குமார் ரெட்டி ஆகியோரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “நாங்கள் சாவர்க்கர் வழி வந்தவர்கள் இல்லை, ஒருபோதும் மன்னிப்பு கேட் மாட்டோம். தொடர்ந்து பாஜக அரசை எதிர்த்து போராடுவோம்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன், “இந்த நடவடிக்கை அரசியல் ரீதியானது. இதை நிச்சயம் எதிர்த்து போராடுவோம். நாளை அரசியல் சாசனத்தை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட உள்ளோம். பாஜக அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் ” என்றார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விவரம்;
குர்ஜித் சிங் ஆஜ்லா
அமரிந்தர் சிங் ராஜா வாரிங்
மாணிக்கம் தாகூர்
ஹிபி ஈடன்
பிரஷாந்த் படோல்
சு.வெங்கடேசன் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கிரண் ரெட்டி
ஜின் குரியகோஸ்
[youtube-feed feed=1]