டெல்லி:  பட்ஜெட்டில்,   9 துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,   ஆந்திரா , பீகாருக்கு சிறப்பு நிதி, பெண்கள் நலனுக்கு ரூ.3 லட்சம் கோடி, கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ 2.66 லட்சம் கோடி,  100 நகரங்களில் தொழில் பூங்காக்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

முன்னதாக, இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உதவிக்காரமாக இருந்து வரும் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் 9 துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கப்படுவதாக அறிவித்தார்.

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி , பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கப்படுவதாக நிதி அமைச்சர் கூறினார்.
பெண்கள் நலனுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ 2.66 லட்சம் கோடி  – முத்ரா கடன் – உச்ச வரம்பு அதிகரிப்பு

பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

100 நகரங்களில் தொழில் பூங்காக்கள்

முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 100 நகரங்களில் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு, ஊரக வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

12 மெகா தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல்

நாடு முழுவதும் 12 மெகா தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்

முதல் முறை பணிக்கு செல்பவர்களுக்கு மாதம் ஊதியம் ஊக்க தொகை
முதல் முறை பணிக்கு செல்பவர்களுக்கு அரசு ஒரு மாதம் ஊதியம் ஊக்க தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

ஆந்திராவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரப்பட்ட நிலையில், அந்த மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்தார். அமராவதிக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும்,  பன்னாநாட்டு நிதியகங்கள் மூலம் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு கூடுதல் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பீகாருக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொழில்பூங்கா அமைக்கப்படும்/

மேலும்,  பீகார் மாநிலத்திற்கு புதிய விமான நிலையம், மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்தும்,

பீகார் மாநிலத்தில் மட்டும் 3 அதிவேக எக்ஸ்பிரஸ் சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பிகாரில் அடிக்கடி வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க திட்டம் கொண்டு வரப்படும்.

பிகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த திட்டம்.

நாளந்தா பல்கலையின் மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி.

காசி விஸ்வநாதர் கோயில், உலகத்தரத்தில மேம்படுத்தப்படும். பிகார் கயா, புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.