எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டனின் மிகப் பழமையான நாளிதழான ‘தி கார்டியன்’ எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம் நச்சு நிறைந்தது எனக் குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைக் கொண்ட தி கார்டியன் நாளிதழின் எக்ஸ் தளத்தை 27 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை விட எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் உள்ள தகவல்கள் இனவெறி கோட்பாடுகளை கொண்டதாக உள்ளதாகவும், அமெரிக்க தேர்தலை எக்ஸ் தளம் கையாண்ட விதம் அதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் எக்ஸ் வலைதளத்தை விட்டு 1.15 லட்சம் பயனர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.