சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2020-21ம் ஆண்டில் இதுவரை 43 அரசுத்துறைகளில் 553 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. புகாரின் பேரில் அரசு ஊழியர்கள்  மீது  நடவடிக்கையும் மேற்கொண்டுவருவதாகவும்  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது எவ்வித வழக்குகளும் பதியப்படவில்லை. ஆனால், மற்ற துறைகளை சார்ந்த. அதாவது 43 அரசுத்துறைகiளச் சேர்ந்த அதிகாரிகள்  553 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில்,  116 பேர் லஞ்ச ஒழிப்பு துறையால் பொறி வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, 1178 அரசு ஊழியர்கள் மீது வழக்குபதிவு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில், முதல்கட்டமாக  294 அரசு ஊழியர்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது

போக்குவரத்து துறையில், லஞ்சப்புகார்கள், முந்தைய ஆண்டுகளை விட கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.  247 ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்திரப்பதிவு துறையில் சேர்ந்த 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி துறையில் லஞ்சம் வாங்கிய 195 பேரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைற்று வருகிறது.

டாஸ்மாக் துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மற்றும் ஊழல் செய்த வழக்கில் 67 ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில், முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்சப் புகார் குறைந்திருப்பதாகவும் , 35 காவலர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறைத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் கருவூல கணக்குதுறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது எவ்வித ஊழல் மற்றும் லஞ்ச புகார் குறித்தும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.

2019-20 ஆண்டுகளில் பதியப்பட்ட 102 வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கு லஞ்ச புகாரில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுஉள்ளது. ஆனால் கடந்த இரண்டுகளில்    41 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது