
ரியோடிஜெனிரா: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தான் குணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.
உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது பிரேசில். இந்நிலையில், அந்நாட்டின் அதிபருக்கே கொரோனா தொற்றியது.
கடந்த ஜூலை 7ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் அவர். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட அவர், விரைவில் பணிக்கு செல்ல வேண்டும் எனவும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை எனவும் கூறி, சில நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
கடந்த இரு வாரங்களில் நான்காவது பரிசோதனையை மேற்கொண்ட அவர், 4வது சோதனையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம்! கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel