மும்பை
ஒரே மாதத்தில் 2 ஆம் முறையாக ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் நேற்று மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு வந்துள்ளது.
மும்பை காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நவம்பர் 16-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி (சி இஓ) என்றும் அவர் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் ஒரு பாடலைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்து 300 பேர் படுகாயமடைந்ததது குறிப்பிடத்தக்கதாகும்,