
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.சோதனைக்கு பின் அது புரளி என தெரியவந்தது.
மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த நீலாங்கரைக்கு போலீசார்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்வர் என்பது தெரியவந்தது. புவனேஷ்வர் வழக்கமாக வெடிகுண்டு விடுப்பவர் என்றும் இவர் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
Patrikai.com official YouTube Channel