டில்லி

டில்லி உயர்நீதிமன்றத்தில்  கில்லாடி தெலுங்கு திரைப்படத்தை தடை செய்யக் கோரி பாலிவுட் தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்த கில்லாடி என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது.   இதே கில்லாடி என்னும் பெயரில் அக்‌ஷய்குமார் நடித்து ஒரு இந்தி திரைப்படம் வெளியாகி உள்ளது.  அந்த இந்தி திரைப்படத்தை ரத்தன் ஜெயின் என்பவர் தயாரித்திருந்தார்.

தற்போது ரத்தன் ஜெயின் கில்லாடி என்னும் தெலுங்கு திரைப்படம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தனது மனுவில், “நான் தயாரித்த கில்லாடி என்னும் படத்தின் பெயர் இந்தியா முழுவதும் பொதுவானது,  எனவே நான் அந்த தலைப்பை இந்தியா முழுவதுமாக பதிவு செய்துள்ளேன்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அதே பெயரில் படம் தயாரித்துள்ளேன்.  

இந்த நிலையில்  என்னிடம் அனுமதி பெறாமல் அதே பெயரை ஒரு தெலுங்கு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.   எனவே அந்த படத்துக்குத் தடை விதிக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.   டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை தொடங்க உள்ளது.