டில்லி:
நாடு முழுவதும் காலியாக இருந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28ந்தேதி நடைபெற்றது. 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா 1 லோக் சபா தொகுதி, 1 சட்டமன்ற தொகுதி ஆக மொத்தம 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வாக்கு எண்ணிக்கையில் பாரதியஜனதா தொடக்கம் முதலே பின்தங்கியே வந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், வெற்றிபெற்ற கட்சிகள் விவரம் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தரளி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே. பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற எல்லா தொகுதியிலும் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி, மாநில கட்சி கூட்டணி மட்டுமே வென்றுள்ளது.
பீகார், ஜோகிஹாட்டில் லாலுவின் ராஜ்டிரிய ஜனதாதளம் வெற்றி வாகை சூடியுள்ளது.
ஜார்க்கண்ட், சில்லி மற்றும் கோமியாவில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வென்றுள்ளது.
கர்நாடகா ஆர்.ஆர்.நகரில் காங்கிரஸ் வென்றுள்ளது.
மேகாலயாவின் அம்பாதியில் காங்கிரஸ் வென்றுள்ளது.
பஞ்சாபின் சாகோத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது.
மகாராஷ்டிரா கடகோனில் காங்கிரஸ் வென்றுள்ளது.
கேரளா செங்கணூரில் சிபிஎம் வென்றுள்ளது.
உ.பி நூர்பூரில் சமாஜ்வாடி வென்றுள்ளது.
மே.வங்கத்தின் மகேஷ்தலாவில் திரிணாமுல் வென்றுள்ளது.
லோக்சபா தேர்தல்
4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவின் பந்தாராவில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
நாகாலாந்தில் என்டிபிபி வென்றுள்ளது. உபி கைரானாவில் ஆர்எல்டி வென்றுள்ளது. மகாராஷ்டிராவின் பல்காரில் மட்டும் பாஜக வென்றுள்ளது.