சென்னை: அதிமுக வெற்றி பெற்றாலும் பாஜக வெற்றி பெற்றதாகவே அர்த்தம், அதனால் அதிமுகவும் ஒரு தொகுதியில் கூட வெல்லக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, மநீம,பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரச்சாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன.

இந்நிலையில் இன்று திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது:

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறாது. எந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றாலும் அது பாஜக வெற்றி பெற்றதாகவே அர்த்தம். அதனால் அதிமுகவும் ஒரு தொகுதியில் கூட வெல்லக்கூடாது என்று பேசினார்.