டெல்லி: ஒரு எழுத்தை மாற்றி போட்டு CAA என்பதை CCA என்று பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பதிவிட, இந்த விவகாரம் இணைய உலகில் பெரும் கேலிக்கு ஆக்கப்பட்டு இருக்கிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க பாஜக செய்த காரியம் இப்போது கேலிக்கு ஆளாகிறது.

CAA மற்றும் NRC குறித்து பாஜக தலைவர்கள், பிரமுகர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நடவடிக்கையில் பாஜகவின் முக்கிய தலைவர்களை இணையத்தில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

#IndiaSupportsCCA என்ற ஹாஷ்டேக்கை பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பிரபலமாக்கி வருகின்றனர். அந்த குறிப்பிட்ட ஹாஷ்டேக் #IndiaSupportsCAA என்று இருக்க வேண்டும்.

ஆனால் அந்த ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை தவறாக பதிவிட்டு நகைச்சுவைக்கு ஆளாகி இருக்கின்றனர் பாஜகவினர். அதாவது CAA என்பதற்கு பதிலாக CCA என்று டைப் செய்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரே ஒரு எழுத்து மாற ஒட்டுமொத்த பாஜக எதிர்ப்பாளர்களும் கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் பயனர்கள் பலரும் பாஜக ஐடி விங்கின் தவறை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர்.

பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மால்வியாவின் ட்வீட்டும், குஜராத் பாஜக எம்எல்ஏ ஜகதீஷ் விஷ்வகர்மாவின் ட்வீட்டும் இடம்பெற்றுள்ளன. இருவரும் ஒரே ட்வீட்டை தங்கள் கணக்குகளில் பகிர்ந்துள்ளார்.

அதில், CAAக்கு பதில் CCA என்று மாறி வந்ததால் சிசிஏ தற்போது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. தவறான பதிவுகளை பாஜக தலைவர்கள் தற்போது நீக்கி வருகின்றனர்.