ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநிலன மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும் என உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன.
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்கு கள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
இந்த இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. , 20 மையங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே தேசிய மாநாட்டு கட்சி பல இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, (மதியம் 1.30 மணி நிலவரப்படி) ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி (இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஓமர் அப்துல்லாவின் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு ( ஜேகேஎன்) 41 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அத்துடன், கூட்டணி கட்சிகளான, ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 4 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன்,
ஜம்மு & காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி ஒரு இடத்திலும், சிபிஐ(எம்) ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிட்ட புத்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார். இதையடுத்த செய்தியாளர்களை சந்திதத , தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ” ஜம்மு –காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் எந்த தந்திரத்தையும் செய்யக்கூடாது” என தெரிவித்தார்.