டில்லி

ரசியல் கட்சிகளுக்கு மொத்தமாக அளிக்கப்பட்ட ரூ.637.54 கோடியில் ரூ. 488.94 கோடி பாஜகவுக்கு  அளிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்தல் அறக்கட்டளைகள் அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ள கட்சி நிதி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.   அதன் படி 2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டுகளில் மொத்தம் ரூ.637.54 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.    அதில் அதிகபட்சமாக ரூ.488.94 கோடி நன்கொடை ஆளும் பாஜக வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சென்ற 2016-17 ஆம் ஆண்டு மட்டும் பாஜகவுக்கு ரூ. 290.22 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.    இதில் பெருமளவு தொகை புரூடெண்ட் மற்றும் ஜனதா நிர்வாசக் டிரஸ்ட் ஆகிய அறக்கட்டளைகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.    மற்ற கட்சிகளுக்கு ரூ.35 கோடி மட்டுமே நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.