சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள  சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக தொகுதி பங்கீடு மேலும் சில கட்சிகளை சேர்க்கும் வகையில்,   பாஜக தேசிய தலைமை தமிழ்நாடு  பா.ஜ.க  பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்களை நியமனம் செய்துஅறிவித்து உள்ளது.,

அதன்ப, தேர்தல் பொறுப்பாளராக  மத்திய அமைச்சர், பியூஸ் கோயல், தேர்தல் துணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் . அவரது தாய் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பியூஷ் கோயல் தந்தை முன்னாள்  மத்திய அமைச்சர். கடந்த  2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர் பியூஸ் கோயலை , மீண்டும் 2026 தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைமை நியமனம் செய்துள்ளது.

[youtube-feed feed=1]