பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அந்த 2 பேரும் பாரதியஜனதா சட்டமன்ற உறுப்பினர் சோமசேகர் ரெட்டி என்பவரின் பாதுகாப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் இதுவரை சட்டமன்றத்திற்கு வரவில்லை.
இந்நிலையில் அந்த 2 பேரும் பாஜக பிடியில் இருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது. அவர்கள் பாரதியஜனதா எம்எல்ஏவான சோமசேகர ரெட்டியின் பாதுகாப்பில் இருப்பதாகவும், பிற்பகலில் சட்டமன்ற வாக்கெடுப்பின்போது பங்கு பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கோல்ட் பின்ச் ஹோட்டலில் பேரம் நடப்பதாகவும் கிடைத்த தகவல்களை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மீட்பதற்காக டிஜிபியும் பெங்களூரு கமிஷ்னரும் ஹோட்டலுக்கு விரைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.