சண்டிகர்: ஆட்சி அமைக்கும் வகையில், பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக  முன்னிலை வகித்து வருகிறது. இதனால், ஹரியானாவில் 3வது முறையாக பாஜக  ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவில்  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கையின்போது,   தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பின்னர் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  மதியம் 1.30 மணி நிலவரப்படி, ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் பா.ஜ.க. 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஹரியானாவில் சில தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ.க. மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இருந்தாலம் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளதால், பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும்,  இந்திய தேசிய லோக் தளம்  1, பகுஜன் சமாஜ் கட்சி   1,  சுயேச்சைகள் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.