மும்பை:
கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

பா.ஜ.க தலைவர் சோமையா தனது எழுத்துப்பூர்வ அறிக்கையுடன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாண்டாகுரூஸ் போலீஸார் கடந்த திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர்.