யோத்தி

பாஜக ராமரை வாக்குக்காக 30 வருடங்களாக ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த தேர்தலில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.   ஆனால் கடந்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ராமர் கோவில் அமைக்கும் நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபடவில்லை என இந்து அமைப்புக்கள் தெரிவித்தன.    இது குறித்து பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன.

நேற்று உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் காங்கிரஸ் சார்பில் ஒரு தேர்தல் பேரணி நடந்தது.   அதில் காங்கிரஸ் மூத்த தலைவரி ராஜிவ் சுக்லா கலந்துக் கொண்டார்.  அவர் செய்தியாளர்களிடம், “கடந்த 30 வருடங்களாகவே ராமர் பெயரை சொல்லி பாஜக வாக்கு கேட்கிறது.   ஆனால் வாக்குகள் கிடைத்ததும் அவரை மறந்து விடுகிறது.   இவ்வாறு 30 வருடங்களாக ராமரை பாஜக ஏமாற்றி வருகிறது.

ராமர் மீது சிறிதும் நம்பிக்கை இல்லாத மோடி போன்றோர் ஜெய்ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புகின்றனர்.    ஆனால் காரியம் ஆனதும் மறந்து விடுகின்றனர்.   அவர்களை ஸ்ரீராமர் நிச்சயம் தண்டிப்பார்.   அவர் இவ்வாறு ராமரை ஏமாற்றியதற்காக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நான் இது குறித்து புகார் அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் இம்முறை பாஜக மக்களவை தேர்தலில் பல இடங்களில் தோல்வி அடைய வாய்ப்புள்ளதால் ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.